கான்பூர்:
த்தரபிரதேசம் கான்பூர் அருகே உள்ள காலனியில்,  வாங்கிய கடனை அடைக்க  தனது குழந்தையை ரூ.ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த அவலம் நடதேறியுள்ளது.
baby
உத்தரபிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா காலனியில் வசித்து வருபவர் காலித் –  சயீதா தம்பதி. இவர்களுக்கு  4 குழந்தைகள் உள்ளனர்.  தற்போது 5வதாக சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்றும்  பிறந்தது. குழந்தைகளை பராமரிக்க  காலித் தம்பதிகளுக்கு முடியவில்லை. ஒவ்வொரு நாளும் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டனர்.  கூலித்தொழில் செய்து வந்த காலித்துக்கு  ஏற்கனவே கடன் இருந்ததுள்ளது.
கடன் தொல்லையாலும்,  கடன்காரர்களும் அவர்களிடம் பணம்  திருப்பிக்கேட்டு தொல்லை கொடுத்ததால் காலித் தம்பதி மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.
இதையடுத்து குழந்தையை விற்று கடனை அடைக்கலாம் என யோசனை செய்த காலித்,  கடைசியாக  பிறந்த குழந்தையை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். அவரது சொல்லுக்கு மனைவி சயீதாவும் சம்மதித்தார்.
இதையடுத்து, தெரிந்தவர்கள் மூலம்,  ஜலன் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான ஒருவர்  காலித்தின் குழந்தையை விலைக்கு வாங்க முன் வந்தார். அவர் காலித்துக்கு ரூ. 1½ லட்சம் கொடுத்து பெண் குழந்தையை வாங்கிச்சென்றார்.
இந்த நிலையில் “குழந்தை எங்கே?” என்று அக்கம் – பக்கத்தினர் கேட்டால் என்ன செய்வது என்று யோசித்த காலித் தம்பதி,  குழந்தை காணாமல் போய் விட்டதாக நாடகமாடினர். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது யாரோ குழந்தையை எடுத்து சென்று விட்டனர் என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறினார்.
மேலும் இந்த வி‌ஷயத்தில் அனைவரையும் நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக அவர் கான்பூர் போலீசில் மனு செய்தார். அதில் அவர் தன் குழந்தை திடீரென காணாமல் போய் விட்டதாக கூறி இருந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது சயீதா முன்னுக்குப்பின் முரணாக உளறியதால் அவர்களது ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இதையடுத்து காலித், சயீதா, ஹாரூன் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.காலித் வீட்டில் இருந்த ரூ. 60 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டது.
இந்த அவலமான  கொடுமை குறித்து  அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.