வாஷிங்டன்:
மெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களில் 99% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என அந்நாட்டு தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார்.

உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் 99.2% பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடாதவர்கள். கொரோனாவுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி இருக்கிறது. ஆனாலும், முழுமையாக தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் அனைவருக்கும் போடும் அளவிற்கு தடுப்பூசி கைவசம் உள்ளது. இருந்தபோதிலும், சிலர் தடுப்பூசிக்கு எதிராக இருக்கின்றனர். இதனால் கருத்து வேறுபாடுகளை மக்கள் விடுத்து, அனைவருக்கும் எதிரி கொரோனா வைரஸ் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.