கோவை:
கோவை டவுன்ஹால் அருகே இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என கடைகள் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர்.

கோவையில் பிரச்சாரத்துக்காக வந்த உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பைக் பேரணி சென்ற பாஜகவினர் முழக்கமிட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அக்கட்சி வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது தேர்தல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப். 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக வேட்பாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் தேர்தல் பரப்புரை முடிய உள்ளது. அதேபோல் இன்று நடந்த தேர்தல் பரப்புரையில் வானதி சீனிவாசன் ஆதவாளர்கள் கடைகள் மீது கற்களை வீசியதால் பொதுமக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பே இது போன்று நடந்துகொண்டதால் கோவை தெற்கு தொகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.