முஸ்லிம் மக்கள் மத்தியில் அமைதியின்மை! மத்தியஅரசு குறித்து துணை ஜனாதிபதி கருத்து!

டில்லி,

புதிய ஜனாதிபதியாக பாரதியஜனதாவை சேர்ந்த வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவி ஏற்பு விழா நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் தற்போதைய துணைஜனாதிபதி ஹமித் அன்சாரியின் பதவி காலம் இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து நாட்டு மக்களுக்கு அவர் கடைசியாக லோக்சபா டிவிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, , பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தியாவில் முஸ்லீம்களுக்கு அமைதியின்மை நிலவுவதாக கூறினார்.

துணைஜனாதிபதியின் இந்த பேச்சு,  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணை ஜனாதிபதி ஹமிது அன்சாரி  ராஜ்யசபா தொலைக்காட்சிக்கு கடைசி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பசு விழிப்புணர்வு பிரச்சினையில்,  நாட்டின் மதிப்பிற்கு கேடு விளைவிக்கப்படுகிறது. இதன் காரணமாக  பல முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களுக்கு எதிரான கருத்துகளை வைத்து பார்க்கும் போது முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு குறைந்து கொண்டே வருவதாக நான் எண்ணுகிறேன்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள், இந்த கருத்துகள் தெரிவித்து வருவதை கேட்டுள்ளேன். பெங்களூரில், வட இந்தியாவில் என்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதை நான் கேட்டுள்ளேன்

இந்தியாவில் தாங்கள் வேண்டாதவர்களாகக் கருதப்படுகிறோம் என்ற எண்ணம், முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

அதேநேரத்தில், தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவானது பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக கடந்த 70 ஆண்டுகளாக மட்டும் இல்லை. பல நூற்றாண்டுகளாகவே, இந்நிலையில்தான் இருக்கிறது. தற்போதைய சூழல், அனைவரோடும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சபை உறுப்பினர்களிடம் சகிப்புத்தன்மை குறித்த எனது கருத்துகளை ஆலோசனை செய்திருக்கிறேன்.

காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தான் தீர்க்க முடியும். நாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து முயற்சி எடுத்தால் மட்டுமே சுமூக முடிவு காண முடியும்.

மேலும் மூன்று முறை தலாக் கொடுப்பது என்பது மதப்பிரச்சனை அன்று, சமூக சீர்கேடாகும். அதற்கும் அரசு தகுந்த தீர்வு காண வேண்டும்.

என ஹமிது அன்சாரி துணை ஜனாதிபதியாக தனது கடைசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
Unrest among Muslims, Vice President Hamid Ansari last interviews about Central Government