இலங்கையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரிடம் இருந்து பட்டத்தை வாங்காமல் புறக்கணித்தனர்.

கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டவர் முருத்தெட்டுவெ ஆனந்த தீர எனும் புத்த மத துறவி.

முருத்தெட்டுவெ ஆனந்த தீர

ஆனந்த தீர அந்நாட்டு தொழிற்சங்க தலைவராக இருந்தவர் என்பதும் கடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்க்ஷே-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்க்ஷே-வின் நண்பரான இவரை கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே அறிவித்ததில் இருந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆனந்த தீர-விடம் இருந்து பட்டத்தை வாங்க மறுத்தனர்.

மேலும் சில மாணவர்கள் ஆனந்த தீர-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் வேந்தரை புறக்கணித்து சென்று துணை வேந்தரிடம் வாழ்த்து பெற்று சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

[youtube-feed feed=1]