மும்பை: 2022ம்ஆண்டு  ஜனவரி மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்க உள்ள 19வயதுக்குள்ளோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி பட்டியல் வெளியாகி உள்ளது.

 2022 – ஆம் நடைபெறவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ அறிவித்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.  போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்கின்றன.

தற்போது இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில்  இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு :

யாஷ் துல் (தலைவர்,), ஹர்னூர் சிங், அங்கிரீஷ் ரகுவன்ஷி, எல் கே ரஷீத் (விக்கட் கீப்பர்), நிஷாந்த் சித்து, சித்தார்த் யாதவ், அனீஸ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கௌஷல் தம்பே, ஹங்கர்கேகர், வாழு வாட்ஸ், விக்கி ஓட்ஸ்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான்

தவிர காத்திருப்பு வீரர்களாக ரிஷித் ரெட்டி, உதய் சகாரன்,அன்ஷ் கோஷாய், அம்ரித் ராஜ் உபாத்யா, பி எம்ம் சிங் ராதோர் ஆகியோர் உள்ளனர்.  இந்த அணியில் தமிழக வீரரான மனவ் பாரக் இடம் பெற்றுள்ளது தமிழக ரசிகர்களுக்கு மகிழ்வை அளித்துள்ளது.  சுழல் பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டரான மனவ் பாரக் சென்னையில் பிறந்தவர் ஆவார்.

இந்திய U-19 அணி ஏற்கனவே 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றிருக்கிறது. 2016, 2020ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிவரை முன்னேறி தோற்றது குறிப்பிடத்தக்கது.