டெல்லி: அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் என யுஜிசி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர் கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
கலைஅறிவியல் கல்லூரிகள் தொடங்கி உள்ள நிலையில், விரைவில் பொறியியில், மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கம் முதலாமாண்டு மாணாக்கர்களை ராகிக் செய்வது சீனியர் மாணவர்களின் வழக்கமாக உள்ளது. இதனால் சில அசம்பாவிதங்களும் ஏற்பட்டு பிரச்சினை உருவாகிது. இதை தடுக்கும் வகையில், ஏற்கனவே ராகிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ராகிங் போன்ற சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானயிக்குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவன வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்களிடையே ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அத்துடன், ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என ஒவ்வொரு மாணவரும் www.antiragging.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.