சென்னை:
தொலை நிலை கல்வி படிப்புகளின் பருவத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டயப் படிப்புகளை பயிலும் மாணவா்களுக்கான டிசம்பா்-2022 பருவத்தோ்வுகள் வரும் மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன. இந்த பருவத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel