கிருஷ்ணகிரி:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார்.

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் சமீபத்தில் தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவர் நிர்மல்குமார், கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார், இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

அண்ணாமலையும் அவருக்கு எங்கு சென்றாலும் பணி சிறக்க தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார், இதனையடுத்து பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் கட்சியிலிருந்து விலகினார். இந்த பரபரப்பான நிலையில் ஜே பி நட்டா தமிழ்நாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் அடுத்தடுத்து 2 முக்கிய நிர்வாகிகள் விலகல் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக கூட்டணி குறித்தும் நட்டா, உயர்மட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.