யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து திடீரென அகற்றப்பட்ட டாக்டர், வியட்நாமின் போரின் போது ஏற்பட்ட துன்பத்தைவிட விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாகக் கீழிறக்கப் பட்டது “மிகவும் கொடூரமானது” என்றார்.

69 வயதான டேவிட் டாயோவின் வழக்கறிஞர் தாமஸ் டெமெட்ரியோ, டாக்டர் துன்புறுத்தப் பட்டதால் ஆடிப்போயுள்ளார்” என்றார்.

 
டேவிட் தாவோவின் வழக்கறிஞர், யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அளவிற்கு அதிகமாய் பயணிகள் ஏற்றப் பட்டதால், மருத்துவர் டேவிட் டாவோவை வலுக்கட்டாயமாகத் தூக்கி கீழிறக்கும்போது அவரது மூக்கு உடைந்து காயமடைந்தார். அந்தச் சம்பவத்தில் அவருக்கு ஏற்பட்ட வலியும் பயமும் சைகன் வீழ்ச்சி யின் போது வியட்நாமை விட்டு வெளியேறியபோது உணர்ந்த பயம் மற்றும் வலியைவிட இந்தச் சம்பவம் அவருக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

 

வழக்கறிஞர் தாமஸ் டெமெட்ரியோ(Thomas Demetrio),  சைகன்  வீழ்ச்சியின்போது, வியட்நாமிலிருந்து ஒருப் படகில் பயத்துடன் வெளியேறியதாகக் கூறினார்.

————————————-

சைகைன் சரிவு என்றால் என்ன ?

 

வியட்நாம் மக்கள் இராணுவம் மற்றும் தென் வியட்நாமின் தேசிய விடுதலை முன்னணி (Việt Cộng), ஏப்ரல் 30, 1975 அன்று தென் வியட்நாமின் தலைநகரான சைகோன் ஆகியவற்றைப் கைப்பற்றியதை “சைகைன் சரிவு” அல்லது சைகோனின் விடுதலை என்று வரலாற்றில் அழைக்கப் படுகின்றது. இந்த நிகழ்வின் மூலம் வியட்நாம் போர் முடிவுக்கு கொண்டுவரப் பட்டு சோசலிஸ்ட் குடியரசின் கீழ் வியட்நாம் முறையாக மறுஒழுங்கு செய்யப் பட்டது. தெற்கு வியட்நாம் கைப்பற்றப்பட்டபோது அதற்கு முன்னர், பல்லாயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் அவசர அவசரமாக ஹெலிகாப்டர் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர்.

—————————————–

டாக்டர் குறிப்பிடும் வியட்நாம் வெளியேற்றம் இது தான். “அவர் இடைநிறுத்தப்பட்டு கீழே இழுக்கப்பட்டபோது அடைந்த துயரம் வியட்நாமை விட்டு வெளியேறிய போது அவர் அனுபவித்ததை விட கொடூரமானதாக இருந்தது என்றார். காயங்களுக்குச் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் டாவோ தற்போது மருத்துவமனையிலிருந்து  முதற்கட்ட சிகிச்சை முடிந்து வெளியேறினார். ஆனாலும், மூளையதிர்ச்சி, இரண்டு இழந்த பற்கள் உள்ளைட்ட அல்வேறு காயங்களுக்கு , தொடர்ந்து புனரமைப்பு அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.


யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமையன்று, சிகாகோவில் உள்ள ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில், லூயிவில்லி செல்லும் விமானத்தின் புறப்பாட்டின் (Departure) போது அதன் பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக விமானத்தை விட்டு இறக்கிவிட முயன்றபோது அவரது முகத்தில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இந்தச் சம்பவத்தை உடன் பயணித்தவர்கள் காணொளிக் காட்சியாகப் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பலரும் அதனைக் கண்டித்தும் அனைவருடனும் பகிர்ந்துக் கொண்டும் வைரலாக்கினர். விமானநிலையப் போலிசாரினை வரவழைத்து இந்தப் பயணியைக் கீழிறங்கச் செய்துள்ளனர்.


ஒரு விமானப் பயணியை மரியாதைக்குறைவாகவும், பலவந்தமாகவும், தரதரவென இழுத்துச் செல்லும்போது அவரது முகம் ஒரு தடுப்பில் மோதி ரத்தக்காயம் ஏற்பட்டதை பல பயணிகள் காணொளிக் காட்சியாகப் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

” இனியும் தொடர்ந்து கால்நடைகளைப்போல் பயணிகள் நடத்தப் படுவதை அனுமதிக்கப் போகின்றோமா?” என்று கேட்ட டிமட்ரிகோ விமானச் சேவை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை நீண்டகாலமாகக் கீழ்த் தரமாக நடத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
டாக்டர் டாவோ விரைவில் இந்த யுனைடட் ஏர்லைன்ஸ் மீது மான்நஷ்ட வழக்குத் தொடுக்க வுள்ளதாகவும் தெரிவித்தார்.
திரு டிமட்ரியோவுடன் இணைந்து ஊடகச் சந்திப்பில் டாக்டர் ஐந்து குழந்தைகளில் ஒருவரான கிரிஸ்டல் பெப்பர் கலந்துக் கொண்டார். அவர், “நடந்த சம்பவத்தால் தங்கள் குடும்பம் திகிலடைந்தும், அதிர்ச்சியடைந்தும், அலுத்தும் போய் விட்டது”என்று குறிப்பிட்டார்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன தலைமைஅதிகாரி ( CEO) ஆஸ்கர் முனுஸ் ( Oscar Munoz ), முதலில், டாக்டர் டோவ் போர்க்குணமிக்கவராக இருப்பதாகக் குற்றஞ்சாட்டி இருந்தாலும், பின்னர் அதனைத் திருத்திக் கொண்டு, “யாரும் இது போன்று தவறாக நடத்தப் பட்டிருக்கக் கூடாது. நடந்த சம்பவம் வருத்தத்திற்குரியது. இனி ஒருபோதும் பயணிகளை இறக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதவாறு எங்கள் விதிமுறைகளை மாற்றியமைப்போம். எங்கள் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வொம்” என்றும் உறுதியளித்துள்ளார்.
யுனைடட் நிறுவனம் மருத்துவர் டாவோவிடம் மன்னிப்பு கேட்கப் பலமுறை தொடர்புக் கொள்ள முயன்றதாகக் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இதனை மருத்துவரின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். மருத்துவரின் குடும்பத்தை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு மருத்துவர் விமானத்தையே பார்க்க விரும்பாததால், அவரைக் காரிலேயே தங்களின் இருப்பிடமான கென்டுக்கி (Kentucky)க்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.