காரைக்கால்

லைக்கவசம் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞருக்கு காரைக்கால் காவல்துறையினர் நூதன தண்டனை அளித்துள்ளனர்.

நேற்று காரைக்காலில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் இளைஞர் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அந்த இளைஅரை மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா தடுத்து நிறுத்தியும், விசாரணைக்கு பயந்து அவர் நிற்காமல் சென்று விட்டார்.

பிறகு காவல்துறையினர் அந்த இளைஞரை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர். அத்துடன் அந்த இளைஞருக்கு நூதன தண்டனை வழங்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி அந்த இளைஞர் காரைக்காலில் உள்ள காத்தாபிள்ளை சிக்னலில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பதாகை ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

காரைக்குடி போக்குவரத்து காவல்துறையினர் வழங்கிய இந்த நூதன தண்டனை பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.