சென்னை: பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே இணைஅமைச்சர் சோமன்னா தெரிவித்து உள்ளர்.

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா. நேற்று ஐசிஎஃப்பில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ரயில்வே கட்டண உயர்வு பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமானம் அமைய உள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு புதிய ரயில் நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது என்றார்.
அப்போத செய்தியாளர் ரயில் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அமைச்சர், கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு அனைத்து கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. ஆனால், ரயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படவே இல்லை. ரயில் கட்டணம் படிப்படியாக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உயர்த்தப்படும்” என்று கூறினார்.
. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா சுவாமி தரிசனம் செய்தார்.