டில்லி: 

சைவம் சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் தடை விதித்து  கடந்த மே 26ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா உட்பட சில  மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்ததாவது:

“எந்த உணவு உண்ண வேண்டும் என்பது தனிநபர் விருப்பம். இதில் மக்களின் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல” என்றார்.

அதே நேரம், “அசைவ உணவைக் காட்டிலும் காட்டிலும் சைவ உணவே சிறந்தது. வெளிநாடுகளி லும் பலர் தற்போது சைவத்துக்கு மாறி வருகின்றனர். பல்வேறு புற்று நோய்கள் வருவதற்கும் அசைவ உணவுப் பழக்கத்திற்கு தொடர்பு உண்டு” என்று அமைச்சர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.