மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

Must read

புதுடெல்லி:

பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அர்ஜூன் ராம் மெக்வால் கூறியிருப்பதாவது:

“ கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த நிலையில் மீண்டும் தொற்று இருப்பதாக அடுத்த சோதனையில் முடிவு வந்துள்ளது. எனது உடல் நலம் சீராக உள்ளது. இருப்பினும், நான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article