திருச்சி: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்  என அதுகுறித்து டெல்டா மாவட்டங்களில்  ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல் கொல்முதலுக்கான  ஈரப்பதம் 17 சதவீதம் என்று உள்ள நிலையில், முறை தவறி பெய்த மழையால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டள்ள நிலையில்,நெல் கொல்முதலுக்கான  ஈரப்பதத்தை   22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில், அண்மையில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து, தற்போது வானம் மேகமூட்டம் மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக அறுவடை நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நேரடி தெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார்.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, நெல்லின் ஈரப்பதம் குறித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையடுத்து, மத்திய உணவுத் துறை சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர்  டெல்டா மாவட்டங்க்ளில்  இன்று 3வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.  அவர்களுடன், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.

ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்ற குழுவினர், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல்லைப் பார்வையிட்டு, ஈரப்பதம் குறித்து பரிசோதனை செய்தனர்.

அவர்களிடம் விவசாயிகள் கூறும்போது, “ஒவ்வோர் ஆண்டும் பனி, மழையால் நெல் மகசூல் பாதிக்கப்படுகிறது. நடப்பாண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காரீப் பருவ கொள்முதலில் ஈரப்பதத்தை நிரந்தரமாக 22 சதவீதம் என நிர்ணயிக்க வேண்டும்” என்றனர்.

நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை கூறும்போது, “மத்திய அரசின் அறிக்கை, விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். மத்தியக் குழுவினர் 80 நெல் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்தில் பரிசோதிக்க உள்ளனர்” என்றார். தொடர்ந்து, ஒரத்தநாடு புதூர், புலவன்காடு, தெலுங்கன்குடிக்காடு, பாப்பாநாடு ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து நாகை மாவட்டம் எரவாஞ்சேரி, சீயாத்தமங்கை, பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்ட நெல்லின் ஈரப்பதத்தை அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதோடு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது, நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உடனடியாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதையடுத்து மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கக்கரை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு, புதூர் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் நெல் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதோடு, விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.