டெல்லி: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு  மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவ கீழடியில் அடுத்தாண்டு (2026)  11ம் கட்ட அகழாய்வு தொடங்க தொல்லியல் துறை திட்டமிட்டிருப்பதாக கூறி வந்த நிலையில், அதற்கான அனுமதியை மத்தியஅரசு வழங்கி உள்ளது.

கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை சார்பில் நதிக்கரை நாக ரீகத்தை கண்டறியும் அகழாய்வுகள் தொடங்கின. மூன்று கட்ட அகழாய்விற்கு பின் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு நடைபெறும். அதன்பின் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் குறித்த ஆவணங்கள் தயாரித்து மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசின் காபா அமைப்பு அடுத்த கட்ட அகழாய்விற்கு அனுமதி வழங்கும்.

இதுவரை 10 கட்ட அகழ்வாய்வு பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த பத்தாம் கட்ட அகழாய்வு 2024ல் லோக்சபா தேர்தல் காரணமாக ஜனவரிக்கு பதிலாக ஜூன் 18 கீழடியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தொடங்கப் பட்டது. ஜூனில் பணிகள் தொடங்கியதால் 2025 மார்ச் வரை பணிகள் நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து இருந்தனர்.  ஆனால், 2025ல் 11ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறவே இல்லை.

இதற்கிடையில்,  10ம்கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள், தோண்டப்பட்ட குழிகள் உள்ளிட்டவைகள் குறித்த அறிக்கை மத்திய அரசின் காபா அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதை ஆய்வுசெய்த மத்தியஅரசு, 11ம் கட்ட அகழ்வாய்வுக்கு   அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடத்த  மத்திய அரசு அனுமதி அளித்துளளது.   இந்த அகழ்வாய்வு ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெற வாய்ப்பு உள்ளது.

தற்போது கீழடி பகுதியில்  நடைபெற்று வரும்  திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், அதை வரும்  ஜனவரியில் திறக்கப்பட்டதும், மீண்டும் அகழாய்வு பணி தீவிர மாக நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]