டெல்லி: மத்தியஅரசு நவம்பர் மாதத்துக்கான வரி பங்கீடான ரூ.72,000 கோடியை மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ. 2976.10 கோடியை விடுவித்துள்ளது.
மாநிலங்களுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி, முக்கிய திட்டங்களுக்கு செலவிடுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு 14 தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, இந்த ஆண்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.10.21 லட்சம் கோடியை விடுவிக்கும் என கூறப்படுகிறது.
வழக்கமாக நவம்பர் 10 ஆம் தேதி வரி பங்கீடு விடுவிக்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகையை யொட்டி, தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான வரி வருவாயில் மாநிலங்களின் பங்குத் தொகையை முன்கூட்டியே மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த முடிவால் பண்டிகைகளை முன்னிட்டு மாநில அரசுகள் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழக்கும் என கூறப்படுகிறது.
அதாவது அஇந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான வரி ரூ.72,961.21 கோடியை நவம்பர் 10-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 7ஆம் தேதி அதாவது மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கூற்றுப்படி, நவம்பர் மாதத்திற்கு 28 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.72,961.21 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் உத்தரபிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ.13088.51 கோடியும், பீகாருக்கு ₹7,338 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மாநிலமான மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5727.44 கோடியும், சத்தீஸ்கருக்கு ரூ.2485.79 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.4396.64 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மேற்கு வங்கத்துக்கு ரூ.5488.88 கோடியும், மகாராஷ்டிராவுக்கு ரூ.4608.96 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.2660.88 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி பகிர்வில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.