டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவையில் இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2004-2014) ஏற்பட்ட பொருளாதார, நிர்வாக சீர்குலைவுகள் அனைத்தையும் தொகுத்து, வெள்ளை அறிக்கையாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் (பிப்.,8) தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்றுடன் (9ந்தேதி) முடிவடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலும் ஒருநாள் நீட்டிப்பு செய்து பிப்ரவரி 10ந்தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்றையதினம், மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தைய, நாட்டின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
முன்னதாக இதுகுறித்து மக்களவையில் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில், அக்கட்சி தலைவர் கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது பாஜக ஆட்சியால் நாட்டுக்கு ஆபத்து என்று குற்றம் சாட்டினார்.
இதற்டையில், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய மற்றும் பிந்தைய, நாட்டின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வெள்ளை அறிக்கையானது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி மற்றும் அதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. . ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தோல்விகளின் பட்டியலும், அவற்றில் இருந்து மீள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டனி அரசாங்க எடுத்த நடவடிக்கைகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்
1. முதலாவதாக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 2014 இல் பதவியேற்றபோது, பொருளாதாரம், நிதி நெருக்கடிகள் எப்படி இருந்தன? நிர்வாகத்தின் தன்மை எப்படி இருந்தது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் இந்திய மக்களுக்கும் தெரிவிப்பது.
2. இரண்டாவதாக, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தற்போதைய அமிர்த காலத்தில் மக்களின் வளர்ச்சி ஆசைகளை நிறைவேற்றும் திறன் கொண்டதாக மாற்றுவதற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எடுத்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பது.
3. மூன்றாவதாக, அவ்வாறு செய்வதன் மூலம், தேசிய நலன்களின் முக்கியத்துவம் மற்றும் அரசியல் தேவைகள் மீதான நிர்வாக விஷயங்களில் நிதிப் பொறுப்பு பற்றிய விரிவான விவாதத்தை உருவாக்குவது
4. நான்காவதாக, நாடு வாய்ப்புகளை திறக்கும்போது, புதிய உத்வேகத்துடன் தேசிய வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். என்பன உள்ளிட்ட 4 முக்கிய நோக்கங்களுக்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2004 இல் பிரதமராக பொறுப்பேற்ற டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கத்திற்கு “UPA அரசாங்கம்” என்றும், 2014 இல் பிரதமர் பதவிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்திற்கு “நமது அரசு” போன்ற வார்த்தைகளை வெள்ளை அறிக்கை பயன்படுத்தியுள்ளது.
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டின் பொருளாதார அடித்தளத்தை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட ஊளுளுத..
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கான சீர்திருத்தங்களுக்கு தயாரானது. ஆனால் அதன் பத்தாண்டுகளில் செயல்படாமல் இருந்தது என வெள்ளை அறிக்கை கூறுகிறது.
- ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்தது, வங்கித் துறை பெரும் நெருக்கடியில் இருந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்தது. அரசாங்கம் பெரும் கடனில் இருந்தது.
- கருவூலத்திற்கு, நிதி, வருவாய் பற்றாக்குறைக்கும் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதன் பின்னணி யில் ஏராளமான மோசடிகள் இருந்தன.
- வாராக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தன. காங்., ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது.
- மன்மோகன் சிங் அரசு பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. காமன்வெல்த் போட்டியில் பெரிய ஊழல் நடந்துள்ளது.
- அந்த ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவில் இருந்தன. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மோசமாக இருந்தன.
- தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு சிலருக்கு மட்டுமே காங்., ஆட்சி அனுமதி அளித்துள்ளது. அந்நிய செலாவணி குறைந்த அளவில் கையிருப்பு இருந்தது. தவறான பொருளாதார நிர்வாகம், நிதி ஒழுங்கற்ற தன்மை இருந்தது.
- நாங்கள் பொருளாதாரத்தை படிப்படியாக மீட்டு, சீரான வரிசையில் கொண்டு வருவதற்கான பணிகள் அளப்பரியதாக இருந்தது.
- பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருப்பதோடு வளர்ச்சி பாதையில் கொண்டு வந்துள்ளோம்.
- நிதி உதவி 300 சதவீதம்; வரி பகிர்வு 192 சதவீதம் தமிழ்நாட்டிற்கான நிதி உதவி 2004-முதல் 2014 வரை ரூ.5,924.42 கோடி. அதே நேரத்தில் 2014 முதல் 2024 வரை ரூ.2,30,893 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகமாகும்.
- வரி பகிர்வு 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வரி பகிர்வுரூ.94,977 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 2014 முதல்2024 வரை ரூ.2,77,444 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இது 192 சதவீதம் அதிகமாகும்
- வெள்ளை அறிக்கையின்படி, 2004 இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதன் ஆட்சிக் காலத்தை தொடங்கியபோது பொருளாதாரம் 8சதவீதமாக வளர்ச்சியடைந்திருந்தது (2004 நிதி யாண்டில் தொழில் மற்றும் சேவைத் துறை வளர்ச்சி தலா 7 சதவீதத்திற்கு மேல் மற்றும் விவசாயத் துறை 9 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி) உலக பொருளாதார சூழலும் அப்போது நன்றாக இருந்தது.
- ஆனால், 2014 இல் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்தது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்திருந்தது.
- அரசியல் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை போல் அல்லாமல், பொருளாதார நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுத்தது;
- துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டது மற்றும் பொருளாதாரத்தின் மீது ஒரு உறுதியான கட்டுமானத்தை உருவாக்கியது.
- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச் சென்ற சவால்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முறியடித்தது.
என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த வெள்ளை அறிக்கை மொத்தம் 59 பக்கங்களை கொண்டுள்ளது.
இதன் முழு விவரம் காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை பதிவிறக்கம் செய்யலாம்…
wp-english – parliament Minister Nirmal sitraram 08-02-24