டில்லி:

த்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முறைப்படியாக  பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

தமிழகத்தைபூர்விகமாக கொண்ட சுப்ரமணியம் ஜெய்சங்கர் டில்லியில் பிறந்த வளர்ந்து மத்திய அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். அவரை மோடி தலைமையிலான பாஜக அரசு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தது. இதையடுத்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கர், இதுவரை எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராக இல்லாத நிலையில், இன்று முறைப்படி தன்னை பாஜக உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார்.

சுப்ரமணியம் ஜெய்சங்கர்  ஏற்கனவே, இந்தியாவின் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க துாதராக பணியாற்றியவர். மோடி அரசு  பா.ஜ.க உறுப்பினரல்லாத ஜெய்சங்கரை அமைச்சராக மோடி நியமித்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று  டில்லியில் உள்ள பா.ஜ.,வின் தலைமை அலுவலகம் சென்று தன்னை முறைப்படி பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டார். அவருக்கான உறுப்பினர் அட்டையை வழங்கி, பா.ஜ.,வின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா வாழ்த்தினார்.