டெல்லி: நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான இந்த பாராளுமன்றத்தின் இறுதி முழு  பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே துறைக்கு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார். அதுபோல இ-கோர்ட் திட்டத்துக்கும் ரூ.7ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31ந்தேதி) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   இந்த பட்ஜெட் மோடி தலைமையிலான நடப்பு 5ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 11மணி அளவில் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.  இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்று கூறினார். மேலும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும்  என்றும் விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்பட ”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன். கூறினார்.

ஜவுளி மற்றும் விவசாயம் தவிர மற்ற பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி விகிதங்களை 21ல் இருந்து 13 ஆக குறைக்க நான் முன்மொழிகிறேன். இதன் விளைவாக, பொம்மைகள், சைக்கிள்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட சில பொருட்களின் அடிப்படை சுங்க வரிகள், செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் உள்ளன.

கேமரா லென்ஸ் போன்ற சில பாகங்கள் மற்றும் உள்ளீடுகளின் இறக்குமதி மீதான சுங்க வரியில் நிவாரணம் வழங்கவும் மற்றும் பேட்டரிகளுக்கான லித்தியம்-அயன் செல்கள் மீதான சலுகை வரியை மேலும் ஒரு வருடத்திற்கு தொடரவும் நான் முன்மொழிகிறேன்.

ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில் ஆய்வகத்தால் வளர்க்கப்படும் வைரங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ஐஐடிகளில் ஒன்றிற்கு R&D மானியத்தை அரசாங்கம் வழங்க உள்ளது

10,000 கோடி ரூபாய் முதலீட்டில் வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோவர்தன் திட்டத்தை அரசு அமைக்க உள்ளது

மாற்று உரங்களைப் பயன்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க பிரதமர் பிரணாம் தொடங்கப்படும்

இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு

எம்.எஸ்.எம்.இக்கு தனி டிஜிலாக்கர், அதாவத, சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் உருவாக்கப்படும்
கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு, 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்.