டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

4வது முறையாக பொதுநிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2வது முறையாக 2ஆவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட டேப்லட்டில் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை இந்தியா திடமாக எதிர்கொண்டுள்ளது. தற்போது அந்த பொருளாதார இழப்புகளை சரிசெய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,  உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுவதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ள. அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும் என்றும், ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.