டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்யத பொதுநிதி நிலை அறிக்கையில், இந்த ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி விகிதங்கள் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப் பட்ட டேப்லட்டில் 2வது முறையாக 2ஆவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே வேளையில், ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக பெருமைபடும் நிதியமைச்சர், தனிநபர் வருமான வரி விகிதங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், அரசு ஊழியர்களின் வரிச்சலுகை 14% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது மத்தியஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14% டிடிஎஸ் வரிச்சலுகை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் மூலதன செலவினம் கடந்தாண்டை விட 35.40%ஆக அதிகரித்துள்ளது நாட்டில் நுகர்வை அதிகரிக்க, அரசின் மூலதன செலவினத்திற்கு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடை தயாரிப்பு,தோல் பொருட்கள் தயாரிப்புக்கான வரி குறைக்கப்படுகிறது. அதுபோல, வைரங்கள், ரத்தினங்கள் மீதான வரிகளும் 5சதவிகிம் குறைக்கப்படுகிறது. மொபைல் உள்பட எலக்ட்ரானி பொருட்கள் இறக்குமதிக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இறக்குமதி வரி 7.5% சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.