டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சுமார் 1மணி 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். மோடி தலைமையிலான மத்திய அரசில் நிர்மலா சீத்தாராமன் இன்று 3வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பொதுமுடக்கத்தால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் , பொதுமுடக்கம் அறிவிக்காவிட்டால், பெரும் சேதங்களை சந்தித்திருக்கும் என்றவர், எல்ஐசி உள்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பபோவதாக அறிவித்து உள்ளார்.  சுமார் 1 மணி நேரம் 50 நிமிடம் அவர் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.

இன்றைய பட்ஜெட்டில் துறை வாரியாக அவர் ஒதுக்கிய நிதி விவரங்கள்:-

வீட்டு நகர்ப்புற அமைச்சகத்துக்கு  ரூ.54,581 கோடி ஒதுக்கீடு

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ரூ.73,932 கோடி ஒதுக்கீடு

கல்வி அமைச்சகத்துக்கு ரூ. 93,224 கோடி ஒதுக்கீடு

ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.11.00,55 கோடி ஒதுக்கீடு

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு ரூ. 11,81,01 கோடி ஒதுக்கீடு

விவசாய அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ரூ.13,15,31 கோடி ஒதுக்கீடு

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ. 13,36,90 கோடி ஒதுக்கீடு

உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 16.65,47 கோடி

நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்துக்கு ரூ.25,69,48 கோடி ஒதுக்கீடு

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.47,81,95 கோடி ஒதுக்கீடு