டெல்லி: சென்னை- சேலம் 8 வழிச்சாலை பணிகள் நடப்பாண்டே தொடங்கும் என பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
2021-22ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லாமல், டிஜிட்டல் முறையில் “மேட் இன் இந்தியா” டேப்லெட் பயன்படுத்தி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்காகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அத்துடன், சென்னை -சேலம் எட்டு வழி சாலைக்காக பணிகள் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று தெரிவித்ததுடன், 277 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கான டெண்டர் இந்த ஆண்டு இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.