சென்னை: மத்திய அரசு பொதுத்துறையை அழிக்க நினைக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார்.

இந்தாண்டின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கொரோனா பெருந்தொற்று பரவல் எதிரொலியாக டிஜிட்டல் முறையில் காகிதமின்றி இந்த பட்ஜெட்டை அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்த கருத்து கூறி உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மத்திய அரசு பொதுத்துறையை அழிக்க நினைக்கிறது என்று கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:

ஒவ்வொரு நாடும், ஒரு காலத்தில்  விழும், ஒரு காலத்தில் எழும். நேரு சிறந்த நாட்டை உருவாக்கினார். பொதுத்துறையும் வேண்டும், தனியார்துறையும் வேண்டும். இத்தகைய கலப்பு பொருளாதாரத்தை நேரு உருவாக்கினார்.

மத்திய அரசு பொதுத்துறையை அழிக்க நினைக்கிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பொதுத்துறையை நசுக்க நினைப்பது நல்லதல்ல என்று கூறி உள்ளார்.