டெல்லி:
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 2வது பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக, குடியரசுத் தலைவரை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், சரியாக 11 மணி அளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.
மறைந்த முன்னாள் நிதிஅமைச்சர் அருண்ஜெட்லிக்கு நன்றி தெரிவித்த நிலையில், பட்ஜெட்டை வாசித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரியின் பிரதான கட்டிடக் கலைஞரான தொலைநோக்குத் தலைவர் மறைந்த அருண் ஜெட்லிக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். கட்டமைப்பு சீர்திருத்தங்களில் ஜி.எஸ்.டி மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி படிப்படியாக நாட்டை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்த ஒரு வரியாக முதிர்ச்சி யடைந்து வருகிறது.
நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. வருமானம் மற்றும் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கும். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது இருக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பெண்கள் உள்ளிட்டோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் நோக்கம் கொண்டுள்ளது. ஆரோக்கியமான வர்த்தகத்தை குறி வைத்து அரசு செயல்படுகிறது – நிர்மலா சீதாராமன் , அரசின் பொருளாதார கொள்கை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் (சப்கா சாத், சப்கா விகாஸ்) என்ற குறிக்ளோடுடன் இந்திய அரசு உழைத்து வருகிறது.
மொத்தம் 60 லட்சம் பேர்கள் புதிய வரி செலுத்துவோர் பட்டியலுக்குள் வந்திருக்கின்றனர். 105 கோடி ஜிஎஸ்டி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி திட்டம் மிகப்பெரிய சீர்திருத்தம். ஜிஎஸ்டி போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் செயல்திறனைப் பெற்றது, இது மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பயனளித்துள்ளது. ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நன்மை கிடைத்துள்ளது.
பண வீக்கம் அளவு கட்டுக்குள் உள்ளது
மத்திய பட்ஜெட் தாக்கல் – மோடி ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான பயன்கள் நேரடியாக செல்கிறது இதுவரை 40 கோடி பேர் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். ஜிஎஸ்டியால் சிறு குறு நடுத்தர தொழில்துறை பலனடைந்துள்ளது
மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும். பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்றுநோக்குகின்றன. உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஜிஎஸ்டி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. ஜிஎஸ்டியால் சிறு குறு நடுத்தர தொழில்துறை பலனடைந்துள்ளது.
2006-2016ம் ஆண்டுகளில் 27.10 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி நடைமுறை எளிமையாக்கப்படும். எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும். பண வீக்கம் அளவு கட்டுக்குள் உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கொண்டு செல்லப்படும். கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன், ஜிடிபியில் 52 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக குறைந்துள்ளது. துடிப்பான புதிய பொருளாதாரத்திற்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறோம்.
தொடர்ந்து வாசித்து வருகிறார்…
முன்னதாக இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் 2020 நகல்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியதும், அதன் நகல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.