அகமதாபாத்
இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத் நகரத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி கூட்டம் போலந்தில் நேற்று நடந்தது. இதில் அகமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், 600 ஆண்டுகளுக்கு முன் அகமது ஷாவால் கோட்டை நகரமாக உருவாக்கப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி இந் நகரத்தில் 1915 முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். இங்கு முதன் முறையாக 1984 ஆம் ஆண்டில் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அகமதாபாத்மாநகராட்சி பாரம்பரிய பிரிவு ஒன்றையும் ஏற்படுத்தியது.
இந்நகரம் 2011 -ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியில் வெளியிடப்பட்ட யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமாகக் கூடிய பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று உலகப் பாரம்பரிய நகரமாக அகமதாபாத் அறிவிக்கப்பட்டது.