சென்னை:

மிழக சட்டமன்றத்தில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய வெளியிட்ட அறிவிப்புக்கு முதுநிலை படிப்புகள் படித்துள்ள எம்.பி.ஏ., எம்.டெக்,எம்.எஸ்.சி.,  மற்றும் பி.இ., பி.டெக் உள்பட ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது தமிழகத்தின் வேலையில்லா திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுள்ளது.

தமிழக சட்டசபை செயலகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, சட்டமன்றத்தில் சில வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது. அதில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவித்திருந்தது.

இந்த வேலைக்கு குறைந்த பட்ச படிப்பாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

அனால், சாதாரண துப்புரவு பணியாளர் வேலைக்கு இதுவரை 4,607 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்து உள்ளார். விண்ணப்பங்களை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

விண்ணப்பத்தவர்களில்  பெரும்பாலோர்  இன்ஜினியர்கள், எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற முதுகலை பட்டதாரிகள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாக தெரிய வந்துள்ளது. 14  துப்புரவு பணியிடங்களுக்கு, பணியாளர்கள் நியமிக்கப்படும்போது, இக்கல்வி தகுதி உள்ளோர் நியமிக்கப்படுவார்களா, அல்லது, நிராகரிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியாளர்களின் பேராசையினால்,  தமிழகத்தில், கணக்கிலடங்கா தரமற்ற கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், அதன் காரணமாக லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பொதி சுமக்கும் மாடுகளை நினைத்து,வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே படித்து வந்த நிலையில், இன்று தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் அவலம் இந்த விண்ணப்பங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏற்கனவே,  2017-18ம் ஆண்டுக்கான வேலையில்லா திண்டாட்ட புள்ளி விவரக் கணக்கெடுப் புப்படி, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், 6.1 சதவீதமாக இருப்பதாகவும்,இது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என்றும் தேசிய மாதிரி சர்வே எச்சரிக்கை செய்திருந்தது.

அதை உறுதிபடுத்தும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் தெரிய வந்துள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், தமிழக அரசு சமீபத்தில் 2வது  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி,  கோடிக்கணக்கான மூதலீடு குவிந்து உள்ளதாகவும், இதன் காரணமாக லட்சக்கணக் கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக புருடா விட்டுக்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.