வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால் தீர்வு காண முடியாது இன்றைய பொருளாதார சூழலில் சமூக, பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பது அரசால் மட்டுமே முடியாத காரியம் என்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “பெருமுதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மனித வளத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு போதுமான முன்னுரிமை கொடுக்கவில்லை, சிறு குறு தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னதாக, “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், “அரசாங்கத்தின் தலையீடு ஒவ்வொரு சமூக மற்றும் பொருளாதார சவால்களையும் தீர்க்க முடியும் என்று நினைப்பது தவறானது” என்று பேசினார்.

வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது… மோடியின் பொருளாதார ஆலோசகர் பேச்சு