சென்னை: தமிழ்நாட்டில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5ஆண்டுகளை கடந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, ஏழை வேலையில்லா பட்டதாரிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் உதவித்தொகைஅளித்து வருகிறது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் பிளஸ்2, கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5ஆண்டுகளை கடந்தும் பணி கிடைக்காதவர்கள், இந்த திட்டத்தில் பயனடையலாம்.
இளங்கலை / முதுகலை பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறமுடியும். ஆனால், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் விவசாயம், சட்டம் போன்ற பட்ட படிப்பு படித்தவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ. 200/-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/- 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு சமமான தகுதிபெற்றவர்களுக்கு /- ரூ400ம்,. பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 600/- வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே உதவிதொகை பெற தகுதியானவ்ர்கள்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 50,000- மேல் இருக்க கூடாது. பொது பிரிவினர்கள் 40 வயதிற்குள்ளும், மற்ற பிரிவினர்கள் 45வயத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேராக சென்று விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பெற்ற பின் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5ஆண்டுகளை கடந்த வேலையில்லா பட்டதாரிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.