காசர்கோடு:  கேரள மாநிலத்தில் பாலம் கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, இடிந்து விழுந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதி பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று திடீரென இடிந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தின்போது, பாலத்தின் கீழே யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த விபத்தின்போது அதில் பணியாற்றி வந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அந்த மேம்பாலத்தை கட்டிவரும்  கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து  தகவல்அறிந்ததும், மக்களவை எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.