கீவ்: உக்ரைன் மக்கள் தலைநகர் கீவ்-வில் இருந்து சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷிய படை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஆதரவு நேட்டோ விவகாரத்தால், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, இன்று 5வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், உலக நாடுகளில் வற்புறுத்தல் காரணமாக இரு நாடுகளுக்கு பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, அண்டை நாடான பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா ராணுவம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உக்ரைன் ராணுவமும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  ‘உக்ரைன் மக்கள் தலைநகர் கீவ்-வில் இருந்து சுதந்திரமாக வெளியேறலாம் – ரஷ்ய ராணுவம்  திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று உக்ரைனை சுற்றி வளைத்து தாக்கவும் உத்தரவிட்டிருந்தார். மேலும்  வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. குறிப்பாக உக்ரைனின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. 70 தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், உக்ரைன் தலைநகர் கீவில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம், வாலோடிமிர், டெர்னோபில், ரிவ்னி, நவோராட் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ தளங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் சரமாரி குண்டுகளை வீசின. இந்த தளங்கள் மீது ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி,  இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள அணு உலை கழிவு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக  ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அணு உலை கழிவு கட்டிடம் சேதம் அடைந்ததா? என்ற தகவல் தெரியவில்லை. அணு உலை கழிவு சேதம் அடைந்திருந்தால் மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்.

இதற்கிடையில், உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஜி7 கூட்டமைப்பும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது.

ஐநா சபையும் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானத்துகு வாக்கெடுப்பு நடத்தியது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் மீது, பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற பரபரப்பான சூழலில், உக்ரைன் தலைநர் கீவ்-ல் இருந்து பொதுமக்கள் உடனே சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷிய ராணுவம் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கீவ் மீது தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கான அறிவிப்பா? அல்லது சமாதானத்துக்கான அறிவிப்பா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.