டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சவை மற்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 12மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது. இன்று 3வது நாளாக ரஷியா உக்கரைன் மீது தாக்குதலை தொடரும் நிலையில், இரு நாடுகளும் போரை கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உலகின் பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்தார்.

இந்த நிலையில்,உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.