உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கைவைத்தால் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி வரும் என்று கொக்கரித்த நாடுகள் இப்போது மௌனம் காத்து வருகின்றன.
போரை நிறுத்தக் கோரி இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட நடுநிலை நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புடினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழக்கம் போல் பல கட்ட பொருளாதார தடை விதித்து வருகிறது, ஆனால் ரஷ்யா இந்த பொருளாதார தடை குறித்து சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையிலான இந்த சண்டை கிறித்தவ புனித நூலில் வருவது போல் கெய்ன் – ஏபிள் சகோதரர்கள் இடையே நடந்த சண்டை மீண்டும் நடைபெறுவது போல் உள்ளது என்று உக்ரைன் பழமைவாத கிறுத்துவ மத தலைவர் க்ரில் கூறியுள்ளார்.
ஏபிள் மீது கொண்ட பொறாமையால் தனது நிலையை மறந்து உடன் பிறந்த சகோதரனைக் கொன்ற கெய்னின் பாவச் செயல் போன்று இந்த சகோதர யுத்தத்தை ரஷ்யா துவங்கியுள்ளது என்று நேற்று அவர் ரஷ்ய அதிபரை நேரடியாக குறிப்பிட்டு கூறியுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒரே மத நம்பிக்கையின் கீழ் ஞானஸ்தானம் பெற்றவர்கள் என்பதை நினைவில் வைத்து இந்தப் போரை உடனடியாக இருவரும் நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
போரை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் – ஆப்கானின் தாலிபான் அரசு வேண்டுகோள்