கீவ்: புத்தாண்டில் உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதல்- 400 ரஷிய வீரர்கள்பலியானதாக தகவல்கள் வெளியானது. ஆனால், 63 பேர் பலியாகி இருப்பதாக ரஷியா ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரேன் ரஷ்யா போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. இரு தரப்பினருக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் இரு தரப்பும் சமாதானத்துக்கு வர மறுக்கின்றனர். பெரியா நாடான ரஷ்யா தனது அதிகாரத்தை உக்ரைமீன் செலுத்த முன்வந்துள்ள நிலையில், அமெரிக்கா, உக்ரைனுக்க போர் தளவாடங்கள் வழங்கி, உசுப்பேத்தி வருகிறது. இதனால் கடும் பேரழிவை சந்தித்துள்ள உக்ரேன், ரஷ்யாமீதும் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஞாயிறன்று புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்திலேயே உக்ரைனின் கிவ் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா ஏவிய 20 குரூயிஸ் ஏவுகணைகளில் 12-ஐ சுட்டு வீழ்த்திவிட்டதாக யுக்ரேன் ராணுவ தளபதி வலெரி ஸல்யூஜ்னி தெரிவித்துள்ளார். யுக்ரேன் மீதான படையெடுப்பு தொடங்கியதற்குப் பிறகு ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில் இதுவும் ஒன்று.
ரஷியா பொதுமக்களைக் குறிவைக்கவில்லை என்று ரஷ்யா மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், முக்கியமான மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை புதின் அண்மையில் ஒப்புக் கொண்டார். அண்மையில் ரஷ்யா அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களால் யுக்ரேனில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது. இதில் 4 ராக்கெட்டுகளை ரஷியா இடை மறித்து அழித்து விட்ட நிலையில், 2 ராக்கெட்டுகள் குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாகவும், புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் ரஷிய வீரர்கள் தங்கியிருந்த ராணுவ தளத்தி;ன மீது நடத்திய தாக்குதலில் 63 ரஷிய வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கியிருந்த கட்டிடம் தரைமட்டமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ராக்குலதுக்கு பயன்படுத்தப்பட்ட ராக்கெட்,. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து ஏவப்பட்டுள்ளன. ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 ராக்கெட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷிய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால் இது மிகவும் கொடிய தாக்குதல் என்றும், பத்து மாதங்களுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து ஒரே ஒரு சம்பவத்தில் மாஸ்கோவால் ஒப்புக்கொள்ளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இது என்று பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக மாஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரேனியப் படைகள் ரஷ்ய துருப்புக்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் மீது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமார்ஸ் ராக்கெட் அமைப்பைப் பயன்படுத்தி ஆறு ராக்கெட்டுகளை வீசியதாகக் கூறியது. அவர்களில் இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ரஷிய வீரர்கள் தங்கியிருந்த கட்டிடமே “கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டது” என்றும், அங்கு வைக்கப்பட்டிருந்த, “கிட்டத்தட்ட அனைத்து இராணுவ உபகரணங்களும் அழிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலின்போது, உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்ய ஆளில்லா விமானத்தின் படத்தை ரஷ்ய மொழியில் “புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளனர். ரஷ்யா பல மாதங்களாக உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து, மின் நிலையங்களை அழித்து மில்லியன் கணக்கான மக்களை இருளில் மூழ்கடித்து வருகிறது.