லண்டன்: பிரிட்டன் பிரதமா் பதவி தோதல் களத்தில்  பல முற்றுகளில் முன்னிலை வகித்து வந்த  இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்து வருவதாக கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.  அவரை எதிர்த்து களத்தில் உள்ள  லிஸ் டிரஸ் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதன் முடிவு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும், அடுத்த நாள் வெற்றியாளர் ஜான்சனிடம் இருந்து பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக  இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் உள்பட பலர் பிரதமர் பதவிக்கான போட்டியில் குதித்தனர்.  இருந்தாலும் பிரதமர் பதவியை பிடிக்க முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் , வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் , முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் இவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இதைத்தொடர்ந்து,  பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 சுற்று முடிவில் ரிஷி சுனக் முன்னிலை வகித்து வந்தார். இறுதிச்சுற்றுக்கு ரிஷி சுனக்கும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், அங்கு நடைபெற்ற கருத்துக்கணிப்பில்,  இந்திய வம்சாவளியைச் சோந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்கைவிட அதிக ஆதரவு பெற்று வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் மீண்டும் முன்னிலை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ‘தி கன்சா்வேட்டிவ் ஹோம்’ வலைதளம் புதன்கிழமை நடத்திய கருத்துக் கணிப்பில் 961 கட்சி வாக்காளா்கள் பங்கேற்றனா். அவா்களில் 60 சதவீதத்தினா் லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனா். ரிஷி சுனக்கை 28 சதவீதத்தினா் மட்டுமே ஆதரித்து வாக்களித்திருந்தனா். எந்த முடிவையும் எடுக்காத 9 சதவீத்தினரின் வாக்குகள் லிஸ் டிரஸ்ஸுக்கும் ரிஷி சுனக்குக்கும் இடையே சமமாகப் பங்கிடப்பட்டது. இதில், லிஸ் டிரஸ் 32 புள்ளிகள் முன்னிலை பெற்று முன்னணியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்பு…