ண்டன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் இதுவரை 12.5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   மரணமடைந்தோர் எண்ணிக்கை 70000 ஐ எட்டுகிறது.  அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் பாதிப்பு அதிகம் உள்ளது.

பிரிட்டன் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்டார்.  அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.  அதன் பிறகு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தற்போது அவருக்குத் தொடர்ந்து அறிகுறிகள் காணப்படுவதாகச் சொல்லப்பட்டது.

அதையொட்டி அவர் மீண்டும் கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பிரிட்டன் அரசு இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அறிவித்துள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பு அரசி எலிசபெத் மக்கள் உறுதியாகச் செயல்படுவதன் மூலம் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளலாம் எனக் கூறி இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன் விரைவில் குணம் பெற வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தி அனுப்பி உள்ளார்.

நன்றி : பிபிசி செய்திகள்