லண்டன்:
ஜெர்மன் அதிகாரிகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா கொரோனா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கான தரவுகள் சரியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மறுத்துள்ளது, அனைத்து வயதினரும் இதனை பயன்படுத்தலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் ஜெர்மன் அதிகாரிகள் இதனை மதிப்பிட சரியான தரவுகள் எதுவும் இல்லை எனவும் இந்த மருந்தை 18-64 வயது வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதை மறுத்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பைசர் தடுப்பூசியை போலவே ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியும் உள்ளது, ஆகவே இதை அனைத்து வயது மகளுக்கும் பயன்படுத்துவதில் எவ்வித தயக்கமும் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.