டில்லி

ல்லூரியில் சேர்ந்து செப்டம்பர் 30  ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பித் தர யுஜிசி உத்தரவு இட்டுள்ளது.

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கூடங்களில் மாணவர் சேர்க்கை சற்று தாமதமாக தொடங்குவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகும்.   எனவே அதற்குள் மற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து இங்கு இடம் கிடைத்ததும் அந்த கல்லூரிகளிலிருந்து விலகி இங்குச் சேருவதை மாணவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் இவ்வாறு விலகும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தருவது கிடையாது.  இதனால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையற்ற பணை விரயம் ஏற்படுகிறது.   இது குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது.

இன்று பல்கலைக்கழ்க மானியக் குழு (யுஜிசி) பிறப்பித்துள்ள உத்தரவில்,

“அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளிலும் செப்டம்பர் 30 ஆன் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும்.   இது அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும்.

எனவே நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும். 

அதே வேளையில். செப்டம்பர் 30 மற்றும் அதற்கு முன் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யலாம்.”

என்று கூறப்பட்டுள்ளது.