அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது.
ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஏற்கனவே நமீபியா அணி தகுதி பெற்ற நிலையில் தற்போது உகாண்டா அணியும் தகுதி பெற்றுள்ளது.
இதனையடுத்து இந்த தொடரில் விளையாடவுள்ள அணிகளின் விவரம் :
மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா
ஆகிய மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன, நான்கு குழுக்களாக பிரிக்கப்படும் இந்த அணிகளில் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் 8 அணிகளும் மீண்டும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதவுள்ள நிலையில் குழுவில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.