கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது பட்டப்பகலில் நடைபெற்ற கொலைவெறித் தாக்குதல். இதில், கவுசல்யா கணவர் சங்கா் உயிரிழந்தாா். இந்த கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் மணிகண்டன், செல்வகுமார், தமிழ்வாணன், ஜெகதீசன் மற்றும் மதன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்ததீர்ப்பை எதிர்த்து, சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன், கவுசல்யா தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது.
மனுவில்,”இந்த விஷயத்தை உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஒரு பெண்ணின்
கணவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் கொன்றார். அதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவரை குற்றவாளி இல்லை நிதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவருக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கணவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் கொன்றார். அதற்கான சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவரை குற்றவாளி இல்லை நிதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவருக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சின்னசாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.