சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று  தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்.

விழாவில் விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை வழங்கிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் பதவி, புதிய மாவட்ட செயலாளர்கள், 2026 சட்டசபை தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்ட முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.,

“துணை முதல்வேர் பதவி குறித்து முதல்ஆர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். தொண்டர்கள் அவர்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். எதுவாக இருந்தாலும், எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம்”

என்று கூறியுள்ளார்.