துரை

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் ஒரு போதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காது எனக் கூறி உள்ளார்.

நேற்று மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்ளிடம்,

“முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம்.

எல்லா திட்டப் பணிகளையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பதிலளித்துவிட்டார். தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.”

என்று தெரிவித்துள்ளார்.