விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் வாரிசு படத்தின் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியுள்ளது.

தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, தென் ஆற்காடு மற்றும் வட ஆற்காடு ஆகிய மாவட்ட விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் தமிழ்நாடு உரிமையை ஏற்கனவே ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் உரிமையையும் வாங்கியுள்ளதை அடுத்து இரண்டு படங்களும் சரிசமமான திரையரங்குகளில் திரையிடப்படும் என்பதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.