சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன்  உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதியாகி வருகிறது. அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

இந்த தொகுதியில் உதயநிதியை எதிர்த்து, அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. வேட்பாளராக  ஏவிஎ கஸ்ஸாலி என்பவர் போட்டியிட்டார். இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே  உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருந்து வருகிறார். 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறி செல்கிறார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.