முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை நன்கு அறிமுகமான ஆயிரக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது,

இந்நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தை 50 படுக்கைகள் கொண்ட கோவிட் 19 மருத்துவமனையாக மாற்றியுள்ளார் இயக்குநர் என்.லிங்குசாமி. இதனை நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நேற்று இதனை திறந்து வைத்தனர்.

[youtube-feed feed=1]