தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

அரசியலில் பிஸியான உதயநிதி ஸ்டாலின் புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் உதயநிதி நடிப்பில் வெளியான “கண்ணே கலைமானே” படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நேற்று முன்தினம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.

அந்த போஸ்டரில் உதயநிதியை ‘மக்கள் அன்பன்’ எனக் குறிப்பிட்டிருந்தனர் சீனு ராமசாமி – ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ படக்குழுவினர். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் இயங்கி வருவதால், உதயநிதிக்கு ‘மக்கள் அன்பன்’ என பட்டம் கொடுத்திருப்பதாக தெரிகிறது.