சென்னை

மிழக துணை முத்ல்வர் உதயநிதி தன் மீது வைக்கப்படும் விமர்சாங்களுக்கு தமது செய்ல்பாடுகள் மூலம் பதில் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாமல் கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது.

கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதல்வ்ர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். நேற்று அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்று ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அந்த மாற்றத்தின்படி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உதயநிதி தற்போது வகிக்கும் துறையுடன் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தும் துறையை சேர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பிறகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,\

”என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். மக்களுக்காக உழைக்க இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”

என்று கூறியுள்ளார்.