திருவனந்தபுரம்:

கேரள சட்டசபைக்குள் ஐக்கிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு மாநில கவர்னருக்கு எதிராக  பதாதைகளுடன் கடும் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.

கேரள சட்டமன்றத்தின்  ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து உரையாற்ற மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வந்திருந்தார். அவருக்கு எதிராக சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ஷல்களின் பலத்த பாதுகாப்புடன் முதல்வர் பினராயி விஜயன்,  கவர்னர் ஆரிப் முகமது கானை  அழைத்து வந்தார்.

அப்போது, யுடிஎஃப் எம்எல்ஏக்கள் ஆளுநரின் வழியைத் தடுத்து, கவர்னருக்கு எதிராக “திரும்பிப் போ” என்று MLA-க்கள் பதாதைகளுடன் கோஷம் எழுப்பினர். CAA-NRC க்கு எதிராகவும் பதாதைகளுடன் ஐக்கிய முன்னணி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, இதனால் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் எம்எல்ஏக்கள் கோஷமிட்ட நிலையிலும், ஆளுநர் உரையை வாசிக்க  தொடங்கியதும், . யுடிஎஃப் எம்எல்ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளியேறினர்.

இந்த சம்பவம் குறித்து சட்டமன்ற வளாகத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ரமேஷ் சென்னிதலா, ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கேரள சட்டசபையை கேலி செய்கிறார். ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் கருவியாகவும், மாநில  பாஜகவின் மாநிலத் தலைவராக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், மாநிலத்தில், சிபிஎம் மற்றும் ஆளுநருக்கு இடையே ரகசிய புரிதல் உள்ளது, ஏனெனில் இது லாவலின் ஊழல் வழக்கில் முதல்வர் சம்பந்தப்பட்டிருப்பதால் இது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அவர் மத்திய அரசின் உதவியை விரும்புகிறார் என்று கேரள முதல்வர்மீதும் குற்றம் சாட்டினார்.

கேரள சட்டமன்றத்தில் தனக்கு எதிராக நடைபெற்ற அமளி குறித்து கூறிய கவர்னர் முகமது ஆரிப் கான்,  நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது (உத்தரபிரதேசம்) இதை விட மோசமான சம்பவங்களை சந்தித்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

140 உறுப்பனிர்களை கொண்ட கேரள  சட்டமன்றத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் (எல்.டி.எஃப்) 92 எம்.எல்.ஏ.க்களும், . எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்துள்ள காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள யுடிஎஃப், 45 எம்எல்ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.