மும்பை உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை…சிவசேனா அறிவிப்பு

Must read

டெல்லி:

பிரிஹான் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா அறிவித்துள்ளது.

இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், பிரிஹான் மும்பை மாநகராட்சி தேர்தல் வெற்றி குறித்து கவலை இல்லை. இனி அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தான் வெற்றி பெறும். கடந்த 25 ஆண்டு கால சிவசேனா வரலாற்றியல் கூட்டணியால் பல இழப்புகள் தான் நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பாஜ மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கால அவகாசம் இல்லை. எனினும் 90 முதல் 95 சீட்கள் வரை ஒதுக்க சிவசேனா தயாராக இருந்தது. எந்தெந்த வார்டுகள் என்பதில் தான் பிரச்னை எழுந்தது என்றார்.
வரும் பிப்ரவரி 21ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article